W.M.மென்டிஸ் அன்ட் கம்பெனியின் உரிமம் இடைநிறுத்தம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரூபாய் 5.7 பில்லியன் வரி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் பொருட்டு டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனியின் மது உற்பத்தி உரிமம் டிசெம்பர் 5ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வரியை  செலுத்தத் தவறும் நிலை தொடரும் பட்சத்தில் டிசம்பர் 31 க்குப் பின்னர் நிறுவனத்தின் பிற உரிமங்களும் இடைநிறுத்தப்படும் என திணைக்களம் எச்சரித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிய வந்ததுடன், WM Mendis & Co. நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 10 மதுபான உற்பத்தி உரிமங்களில் 8 ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. (P)


Related Posts