Font size:
Print
அரசியல் நெருக்கடியால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும் பிரான்சில் கடும் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இது அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது மேலும் பிரான்ஸ் அதிபர் மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
Related Posts