ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் இன்று வந்துகொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த தவுகித் என்ற 24 வயது வாலிபருக்கும், சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தவுகித்தை இரும்பு கம்பி, கத்தி ஆகிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இறப்பதற்கு முன்பு, தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த நிலையை கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன தவுகித்தின் சகோதரர்கள் தாலிப் , தவுசிப் ஆகிய இருவரும் நிகல்கர் ரயில் நிலையத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் வந்ததும் அவர்களையும் அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகள் சுல்தான்பூர் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை ஏற்குமா அனுர அரசு? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி! | Thedipaar News