சதொசவில் ஒருவருக்கு 3 தேங்காய்,5 கிலோ அரிசி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் தேங்காய் விநியோகத்தை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக வர்த்தக அமைச்சரினால்  அண்மையில்அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய் விற்பனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை லங்கா சதொச அறிவித்துள்ளது. 

அரிசி ஆலைகள் நாளாந்தம் 200,000 கிலோ கிராம் அரிசியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன், ஒரு மில்லியன் தேங்காய்களும் 130 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க  பாராளுமன்றத்தில் நேற்று(04)  தெரிவித்தார்.

அரிசி மற்றும் தேங்காய்களை சதொச விற்பனை நிலையங்களுக்கு இன்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், ஒரு வாடிக்கையாளருக்கு 03 தேங்காய் மற்றும் 05 கிலோ அரிசியை மாத்திரமே கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

இன்று மாலை முதல் கொழும்பில் உள்ள சதொச விற்பனை நிலையங்களிலும், நாளை (டிசம்பர் 06) புறநகர் பகுதிகளிலுள்ள நிலையங்களிலும் அரிசி மற்றும் தேங்காய்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார். (P)


Related Posts