உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிளிநொச்சி - ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபாண்டிய முனை பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஜெயபுரம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். (P)


Related Posts