வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

“.. வாகன இறக்குமதி இப்போது அத்தியவசியமாகியுள்ளது. 4-5 வருடங்களாக வாகன இறக்குமதி இல்லாமல் எமது துறை கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது..

நாங்களும் வாகன இறக்குமதியை விரும்புகிறோம்.

இந்த ஆண்டு பேருந்துகள் மற்றும் லாரிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு எஞ்சிய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர நாங்களும் பிராத்திக்கிறோம்.

தற்போது எந்த வாகனத்தையும் கொண்டு வர அரசு தீர்மானிக்கவில்லை. புதிய அரசாங்கம் இந்த முடிவை மாற்றுமா என்று கூற முடியாது."(P)


Related Posts