வைப்பு நிதிக்கு வரியா? வங்கி மேலாளரை தாக்கிய வாடிக்கையாளர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிரந்தர வைப்பு நிதிக்கு அதிக வரி பிடித்தம் செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளரை வாடிக்கையாளர் ஒருவர் புரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரபூர் யூனியன் வங்கி கிளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வங்கியில் வைக்கப்பட்ட நிரந்தர வைப்பு தொகைக்கு வங்கியாளர்கள் அதிக வரிப்பிடித்தம் செய்ததால் விரக்தியடைந்த ஜெய்மன் ராவல் என்ற அந்த வாடிக்கையாளர் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. அண்மைக் காலமாக ,வாடிக்கையாளர்கள் வங்கியாளர்கள் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக காந்தி மைதான் பகுதியில் அமைந்துள்ள கனரா வங்கி கிளையில், பெண் மேலாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் சிபில் ஸ்கோர் சம்பந்தமாக நடைபெற்ற வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Related Posts