எட்மண்டன் நகரில் வசித்து வந்தவர் ஹர்ஷன்தீப் சிங், வயது 20. இந்தியாவை சேர்ந்தவரான இவர், பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை இரவு 12.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
பேர் கொண்ட கும்பலில் ஒருவர் சிங்கை பிடித்து, படியில் தள்ளி விடுகிறார். மற்றொரு நபர் பின்னால் இருந்தபடி துப்பாக்கியால் சுடுகிறார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வந்தனர். அவர்கள், படியில் கிடந்த சிங்கை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் முன்பே உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் 30 வயதுடையவர்கள். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீடியோ இணைப்பு: https://x.com/401_da_sarpanch/status/1865562879455617096