செய்தே தீருவேன் என வெறியாக இருந்து சாதித்த நயன்தாரா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல தொழில், நடிப்பு என இவர் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பல புதிய தொழில்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக இவர் முதலீடு செய்வதும் அதில் வெற்றி காண்பதும் பல தொழில் முனைவோருக்கு முன் உதாரணமாகவும் ஆதரவாகவும் உள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வந்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. நயன்தாரா அடுத்து ராக்காயி என்ற மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். 

ஹிந்தி படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது, ஆனால் அது குறித்து இப்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில், நாங்கள் பில்லா எடுக்கும் போது நயன்தாரா அவ்வளவு வெறியாக இருந்தார், ஏனெனில் அவர் சில பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.அதனால் கண்டிப்பாக கம்பேக் கொடுத்தே ஆகவேண்டும் என வெறியாக இறங்கி அடித்தார், அதனால் தான் இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார்.அவரின் பின் வாங்காத குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. இதற்கு நயன்தாரா ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts