தனுஷா அவர் சட்டென முகத்தில் அடித்தது போல பேசி விடுவார் - பிரபல நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி. வி. பிரகாஷ். முதல் படத்திலேயே தனது இசையின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.இந்த படத்திற்கு பின்னர் தமிழில் பல படங்களுக்கு இசை அமைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் களமிறங்கினார்.இதன்பின் சர்வம் தாளமயம், பேச்சுலர், நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரை இசை அமைப்பாளராக ஏற்றுக்கொண்ட மக்கள் இவரை நடிகராக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் விடா பிடியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் கூட இவர் தன்னுடைய காதல் மனைவியை விவாரத்து செய்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், தனுஷ் குறித்து முன்பு பேட்டி ஒன்றில் ஜி. வி. பிரகாஷ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். பொல்லாதவன் படம் தான் தனுஷுக்கு நான் இசையமைத்த முதல் படம். அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் நானும் தனுஷும் முதன் முதலாக சந்தித்துக்கொண்டோம். தனுஷ் மிகவும் நல்ல குணம் கொண்டவர் ஆனால் அவரைப் பொறுத்தவரை பிடிக்கவில்லை என்றால் மூஞ்சில் அடித்தது போன்று பேசிவிடுவார் என்று தெரிவித்துள்ளார். இவர் சொன்ன அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts