சினிமா பார்த்துவிட்டு விடுதியில் இருந்து தப்பியோடிய மாணவர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் நேற்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

அதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் துல்கர் சல்மான், இறுதியில் கார், வீடு என பெரிய செல்வந்தராக மாறியிருப்பார். இது அந்த மாணவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால், அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடி இருக்கிறார்கள். இது குறித்தான சிசிடிவி காட்களும் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, அவர்கள் காணாமல் போனதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts