மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் பிரகாரம், கரையோர பொலிஸாரினால் இரண்டு பெண்கள், சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்விருவரும் மாளிகாந்த நீதவான் முன்னிலையில், சனிக்கிழமை (14) ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வந்த பெண்ணொருவரின் கணவன், அப்பெண்ணை பிணையில் எடுத்தார். அதன் பின்னர், அங்கிருந்து கணவனுடன் வெளியேறிய போதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் துப்பாகிப்பிரயோத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த மருதானை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (P)