Font size:
Print
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தார்.
இது குறித்து ஜெய்சங்கர் தெரிவிக்கையில்,
இந்தியாவுக்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஆரம்பத்தில் சந்தித்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் SAGAR கோட்பாடு ஆகிய இரண்டிலும் இலங்கை மிகமுக்கியமான இடத்தினைக் கொண்டுள்ளது என்றார்.
தனது சுற்றுப்பயணத்தில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார் அநுர. அப்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. (P)
Related Posts