கனடா மினசோட்டா அல்ல!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் மத்திய அரசின் படைகளால், இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டது குறித்து கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“கனடா மினசோட்டா அல்ல" அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் "கனடா மினசோட்டா அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கனடாவில் குடியேற்ற விதிகளை அமுல்படுத்தும் போது சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கனடா சுமார் 22,000 பேரை முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, மனிதாபிமானத்துடன் வெளியேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடுகளால் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளதா என்ற கேள்விக்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடினமான காலம் நிலவினாலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Posts