ஒரே பதிவு ஊர் வாயை மூடிய இளையராஜா! இசைஞானிக்கே இந்த நிலையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இசையமைப்பாளர் இளையராஜா, சினிமா பணிகளை தாண்டி அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜா கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றபோது அவரை அர்த்த மண்டபத்துக்கு அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை பரவியது. தீவிர கடவுள் பக்தர், உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இசைஞானியை இப்படி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என்பதால் இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியது என்றும், இதன் பிறகு அவரே வெளியில் நின்று தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது. 

இந்தநிலையில், சோசியல் மீடியா முழுக்க இளையராஜாவுக்கே இந்த நிலையா? கோவில் நிர்வாகம் செய்தது சரி இல்லை என பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார்கள். இந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளையராஜாவே எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள்.

Related Posts