பிரபல ஹீரோயினின் அண்ணன் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஆனால் அவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் தனக்கு கிடைத்த வேலை எல்லாவற்றையும் செய்துள்ளார். சினிமாவிற்கு அப்பாற்பட்டு தனக்கு கிடைத்த எல்லா வேலைகளையும் செய்து பின்னரே சினிமாவில் இறங்கி சாதித்து உள்ளார். ஆரம்பத்தில் மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னரே மெல்ல மெல்ல சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். இவருடைய அண்ணன் மணிகண்டனும் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 

அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த நடிகை சோபியாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில தனிப்பட்ட காரணத்தினால் பாதியில் விலகி கொண்டனர். சொல்லப்போனால் இந்த ஜோடி சீரியல் வட்டாரத்தில் முன்னணியில் உள்ள வளர்ந்து வரும் ஜோடி என்று கூட கூறலாம். இருவரும் சீரியலில் பிசியாக நடித்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சோபியா மற்றும் மணிகண்டன் ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவு உண்மை என்பதை இருவரும் சொல்லவில்லை, அமைதி காத்தே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts