அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் தடம்பதித்துவிட்டார். ஹிந்தியில் அவர் இயக்கிய ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து சல்மான் கானை வைத்து அவர் படம் இயக்க போகிறார். இனி வரும் காலங்களின் அவர் மும்பையிலே செட்டில் ஆகிவிடுவார் என தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன, காரணம் ஐயாவுக்கு அங்கு மவுசு அதிகம். ஆம்! அட்லீயை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது பாலிவுட் சினிமா. தமிழ் சினிமா தான் அட்லீயை வைத்து கேலி செய்து கொண்டு இருந்தது. காரணம் அவர் இயக்கும் படங்கள் எல்லாமே பல பழைய படங்களின் கலவையாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின், காமெடியன் மட்டும் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பார்கள். மற்றபடி கதை எல்லாம் எங்கேயோ பார்த்த, கேள்விப்பட்ட கதையாக தான் இருக்கும். என்ன கதையாக இருந்தாலும் சரி இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக சக்கை போடு போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அட்லீ தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தை தயாரித்து இருக்கிறார்.
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அந்த படம்.இந்த நிலையில், ஹிந்தியில் பிரபல டிவி ஷோவான கபில் சர்மா ஷோவுக்கு அட்லீ மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்று இருக்கின்றனர். அப்போது அட்லீயின் தோற்றம் பற்றி கபில் சர்மா கிண்டல் செய்யும் வகையில் பேசி இருக்கிறார்.அதற்கு அட்லீ கொடுத்த பதில் வேற லெவலில் உள்ளது, இந்த பதிலிற்காகவே இவரை மெச்சி வருகிறார்கள் இவரது ரசிகர்கள். இதோ அந்த பதில், ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான் என் முதல் படத்தை தயாரித்தார். எனது லுக் பற்றி அவர் கவலைப்படவில்லை. நான் கதை சொன்ன விதத்தை தான் அவர் பார்த்தார். தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க. மனது எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்க என அட்லீ பதிலடி கொடுத்து இருக்கிறார்.