உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவியுங்கள் -உதய கம்மன்பில வேண்டுகோள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 05 07 வாரங்களில் தேர்தல் இடம்பெற வேண்டும்.


அவ்வாறெனில், ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தேர்தல் இடம்பெற வேண்டும். எனவே, இன்றே (நேற்று) சட்டமூலத்தை சமர்ப்பித்து நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்தால் மாத்திரமே ஏப்ரல் 05ஆம் திகதி தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும். இதற்கிடையில் மார்ச் மாதத்திலேயே சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

எனவே, பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியி லேயே தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட் டுள்ளது.


இதனால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படையலாம். அதனால், பரீட்சைக் காலத்தில் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தலை அறிவித்தால் மே மாதத்தின் இடைப் பகுதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும்.


எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். (P)


Related Posts