கார் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியா அரியானா மாநிலம் சர்சா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சண்டிகர் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன் தினம்  இரவு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பஞ்சாப்பின் மன்சா மாவட்டம் சர்துல்கர் பகுதியில் சென்றபோது கார் மீது சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. 

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அசோக் குமார், உஷா, ரிது, ராதா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தனர். 

கார் ஓட்டுனர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த கார் ஓட்டுனரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Posts