இந்தியாவில், பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரான அதுல் சுபாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொ*லை செய்து கொண்டார். அவரது மனைவி நிகிதா மற்றும் நிகிதாவின் குடும்பத்தினர் சேர்ந்து சுபாஷ் மீது போலியான வழக்குகள் கொடுத்ததும் அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதும் தான் தற்கொ*லைக்கான காரணம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இவரை இவரது மனைவி மற்றும் மாமியார் இவர் செய்யாத குற்றங்களை சாட்டி இவரை பலமுறை கோர்ட் கேஸ் என அலைய வைத்துள்ளனர். இவரும் ஒவ்வொரு முறையும் தன் மீது உள்ள குற்றசாட்டை பொய் என நிரூபிக்க முயன்றுள்ளார். அப்படித்தான் ஒருமுறை பெண் நீதிபதி முன்னிலையில், இப்படி பொய் குற்றசாட்டு சொல்லி ஆண்களை அலைய வைத்தால் அவர்கள் தற்கொ*லை தான் செய்து கொள்ளவேண்டும் என கூறியுள்ளார். இதற்கு இவரது மனைவியே பிறகு நீ ஏன் சாகவில்லை என கேள்வி எழுப்பவே, பெண் நீதிபதி சத்தம் போட்டு சிரித்துள்ளார்.
மேலும் இந்த கேஸ் முடிவுக்கு வர இவரிடம் ஐந்து லட்சம் பணம் கேட்டும் உள்ளார். இதனால் ஆண்களுக்கு நீதி கிடைக்க போவதில்லை என அந்த நபர் முழு நீள காணொளி ஒன்றை பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தி தற்கொ*லை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் சுபாஷின் தந்தை தனது பேரனை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். சுபாஷ் தந்தை பவன் மோடி கூறுகையில் எனது பேரனை ஒரே ஒரு முறை தான் வீடியோ காலில் பார்த்தேன். அவனது பாதுகாப்பை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது. எனது பேரன் இருக்கும் இடம் எதற்காக ரகசியமாக வைக்கப்படுகிறது.இரண்டு வயது குழந்தையை எந்த விடுதியில் சேர்த்து இருப்பார்கள் என்று ஆதங்கத்தோட கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தனது பேரக்குழந்தை கிடைக்காவிட்டால் மொத்த குடும்பமும் தற்கொ*லை செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.