இந்தியாவில், பீகார் மாநிலத்தில் உள்ள ஹசன்பூர் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜிதேந்திர குமார் சிங் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி மகப்பேறு விடுமுறை எடுத்துள்ளார். அந்த மாநில கல்வி துறையும் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி விடுமுறை வழங்கி உள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளியே தெரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பெண்கள் தான் மகப்பேறு விடுமுறை எடுப்பார்கள். ஆனால் இங்கு வித்தியாசமாக ஆண் ஆசிரியர் ஒருவர் மகப்பேறு விடுமுறை எடுத்துள்ளது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் ஒரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில அரசு உறுதி கொடுத்துள்ளது.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை! ; எம் கே சிவாஜிலிங்கம் | Thedipaar News