அரிசி இறக்குமதி :விசேட வர்த்தமானி வௌியீடு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, அரிசியை இறக்குமதி செய்ய தனியாருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, அந்த அனுமதியை மீண்டும் ஜனவரி 10ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து 67000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதும் இதுவரை அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (P)

ஊடகங்கள் முன் தோன்ற NPPயினருக்கு தடை | Thedipaar News

Related Posts