கொழும்பில் தாக்கப்பட்ட இளைஞன்! பிரபல நடிகையின் மகன் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இளைஞன் ஒருவரினால் மற்றுமொரு இளைஞன் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராஜகிரிய பிரதேசத்தில் கராஜ் ஒன்றுக்குள் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த சம்பவம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தாக்கப்பட்ட இளைஞர் வெலிக்கடை பொலிஸாரை அணுகி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தாக்குதல் நடந்த நேரத்தில் பிரபல நடிகையின் மகனும் சம்பவ இடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விசாரணைகளில் இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts