ஆயுதப்படையினரை அழைக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாடளாவிய ரீதியில், அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி, நேற்று (26) வெளியிட்டார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் அது தொடர்பான உள்ளூர் நீர்நிலைகளிலும் பொது ஒழுங்கை பேணுவதற்கு ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளன. (P)

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் : சர்ச்சைக்குள்ளான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! | Thedipaar News

Related Posts