பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வ*ன்கொ*டுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டார். அதன் பிறகு இன்று முதல் 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருக்கப் போவதாகவும் பிப்ரவரி மாதத்தில் அறுபடை வீடுகளுக்கு செல்ல இருப்பதாகவும் கூறினார். இவர் சாட்டையால் அடித்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வ*ன்முறைகள் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அறவழியில் கூட போராட முடியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால்,என்னுடைய கோபம் காக்கி உடையின் மீதுதான். உடலை வருத்திக்கொண்டு வேண்டினால் கண்டிப்பாக அதற்கு பலன் கிடைக்கும். இதுபோன்று பாஜக நிர்வாகிகள் யாரும் செய்ய மாட்டார்கள். அறவழியில் போராட வேண்டும். மேலும் லண்டன் பயணத்திற்கு பிறகு எனக்கு அரசியலில் புரிதல் ஏற்பட்டுள்ளது என்னுடைய பாதை தெளிவாக இருக்கிறது என்று கூறினார்.
எதிர்வரும் திங்கள், செவ்வாய் | விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனம் | Thedipaar News