Font size:
Print
மின்சார கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பமானது.
மத்திய மாகாணத்தில் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.
அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட 50 பேர் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதியும் மேல் மாகாணத்தில் அடுத்த மாதம் 10 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவரேனும் ஒருவருக்கு கருத்துக்களை முன்வைக்க வேண்டுமாயின் 0772943193 எனும் வாட்ஸ் அப் இலக்கத்தினூடாக தம்மை பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (P)
சீன நிதியுதவியின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசம் | Thedipaar NewsRelated Posts