கனடா துப்பாக்கிச் சூடு : வெளியான அதிர்ச்சித் தகவல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் தாக்குதல்தாரி 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'டம்ப்ளர் ரிட்ஜ்' (Tumbler Ridge) பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலும், அதனை அண்மித்த வீடொன்றிலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சந்தேகநபர் கடந்த காலங்களில் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவரது வீட்டுக்கு காவல்துறை பலமுறை நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் வைத்திருந்த துப்பாக்கி உரிமம் காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts