கொழும்பில் துப்பாக்கிச்சூடு! இருவர் சம்பவயிடத்தில் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் காரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

யாரால், எந்தக் காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


 

Related Posts