Font size:
Print
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்பட்டார்.
அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் நெதன்யாகவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
14 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.
Related Posts