Font size:
Print
எகிப்து நாட்டில் மார்சா ஆலம் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரை அமைந்துள்ளது.
இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளில் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் என கூறப்படுகிறது. இதில், அவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலியானார்.
நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி சென்ற அவர் ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு ஆளானார் என அரசு தெரிவித்து உள்ளது.
அவர் எந்த நாட்டை சேர்ந்த நபர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Related Posts