ரஜினி உடன் நடித்த அந்த குழந்தை எப்படி வளர்ந்துட்டார் பாருங்க?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று சந்திரமுகி. பி. வாசு இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்த திரைப்படம். ஒரு படம் நூறு நாள்கள் ஓடலாம், ஆனால் இந்த படமோ 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ரஜினி மற்றும் ஜோதிகாவிற்காகவே இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ரீமேக் படமாக இருந்தாலும், தமிழில் ரஜினியின் ஸ்டைலில் வித்தியாசமாக இருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், நயன்தாரா, வினீத், மாளவிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 

ரஜினிகாந்துடனான இவருடைய காட்சி ரசிகர்களை கவர்ந்தது.இந்த நிலையில், சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பிரகர்ஷிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இது என கேட்டு வருகிறார்கள். இப்போது இவர் படத்தில் எதுவும் நடிப்பதில்லை, சோசியல் மீடியாவில் மட்டும் ஆக்டிவாக உள்ளார்.

Related Posts