ரொறன்ரோவில் புத்தாண்டு காலத்தில் மூடப்படும் வீதிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

புத்தாண்டை முன்னிட்டு ரெறான்ரோ நகரின் சில முக்கிய வீதிகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும் பாதுகாப்பாக வீடு திரும்பவும் இவ்வாறு சில நடவடிக்கைகள் எடுப்பதாக ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை அதிகாலை ஒரு மணி வரையில் ரொறன்ரோவின் சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டவுன்ரவுன் கோர், குயின்ஸ் குயே வெஸ்ட், பே ஸ்ட்ரீட், யோர்க் வீதி உள்ளிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் வான வேடிக்கை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே பொதுப் போக்குவரத்து தொடர்பிலும் இவ்வாறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம் | Thedipaar News

Related Posts