இலான் மஸ்க் குற்றம்சாட்டினார். ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறுவதாக விமர்சித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசிர் பாலாஜி மர்மமாக இறந்தது இன்னொரு சர்ச்சையானது!
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்: ஒரே வாரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லி, ‘ஸ்டார் லைனர்’ விண்கலத்தில் ஜூன் 6இல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் தொழில் நுட்பக் கோளாறுகளால் இன்றுவரை பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இந்தப் புதிய ஆண்டிலாவது சுனிதா மண்ணில் இறங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற சாம்பியன்: விம்பிள்டன், ஃபிரெஞ்சு ஓபன், யு,எஸ்.ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் என 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில்லிருந்து ஓய்வுபெற்றது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விமர்சனங்களுக்குள்ளான சவுதி அரேபியாவின் டென்னிஸ் தூதராகப் பொறுப்பேற்றதால் சர்ச்சைக்குள்ளானார்.
விருது வென்ற பெண்கள்: விண்வெளி முதல் காலநிலை மாற்றம் வரை பேசிய ‘ஆர்பிட்டல்’ நாவலுக்காக பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி ‘புக்கர்’ பரிசை வென்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென் கொரிய எழுத்தாளரான ஹன் காங்குக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை வென்ற முதல் ஆசியப் பெண் இவர்தான்! (P)