விபத்தில் காயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ரயில் நிலைய வீதி,
வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் ஸ்ரீகாந்தன் (வயது- 23) என்ற இறுதி ஆண்டு மாணவராவார்.

கடந்த 25 ஆம் திகதி நண்பர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

 இதில் படுகாயம் அடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை (31) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை வவுனியா பொலிஸார் நெறிப்படுத்தினர். (P)

கேள்விக்குறியாகியுள்ள ரோஹிங்கியா அகதிகளின் எதிர்காலம்! | Thedipaar News

Related Posts