நியூசிலாந்தை வென்ற இலங்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்ற நியூசிலாந்து தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், நெல்சனில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவ்வணியின் தலைவர் மிற்செல் சான்ட்னெர் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென தெரிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் பெரேராவின் 101 (46), அணித்தலைவர் சரித் அசலங்கவின் 46 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், டரைல் மிற்செல் 1-0-6-1, ஜேக்கப் டஃபி 4-0-30-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 219 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, றஷின் றவீந்திரவின் 68 (39), டிம் றொபின்சனின் 37 (21) ஓட்டங்கள் மூலம் வேகமான் ஆரம்பத்தைப் பெற்றதுடன், டரைல் மிற்செல் 35 (17) ஓட்டங்களைப் பெற்றபோதும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களையே பெற்று ஏழு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக குசல் பெரேராவும், தொடரின் நாயகனாக ஜேக்கப் டஃபியின் தெரிவாகினர். (P)

புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளது! | Thedipaar News

Related Posts