கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், கியூபெக், ஒன்டாரியோ, நுனாவுட், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோன் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 

பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ பவுண்ட்லாந்து பகுதியில் பலத்த காற்றும் கடும் பனிப்பொழிவும் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கியூபெக்கில் சுமார் 25 சென்டிமீட்டர்கள் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் பிற்பகல் வேளையில் கடும் மழை பொழியும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 ஒன்றாரியோ மாகாணத்தில் இதே விதமாக கடும் பனிப்பொழிவும் மழையும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுகுன், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு பிராந்தியங்க்ள போன்ற பகுதிகளிலும் கடுமையான குளிர், பனிப்பொழிவு மற்றும் மழை தொடர்பில் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts