மதுரையில் நடிகை குஷ்பு உள்பட பாஜகவினர் கைது !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்பட 500-க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகை குஷ்பு உட்பட கைது செய்யப்பட்ட பாஜகவினர் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்கெனவே ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

மண்டபத்துக்கு பாஜகவினர் அழைத்து வரப்பட்ட பிறகும் வெளியே இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மண்டபத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் மண்டபத்துக்கள் ஆடுகளின் சத்தமும், ஆடுகளின் கழிவுகள் காரணமாக துர்நாற்றமும் வீசியது.

 இதனால் குஷ்பு மற்றும் பாஜகவினர் தங்களை வேறு மண்டபத்துக்கு மாற்றக்கோரி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டனர். வேறு மண்டபத்துக்கு மாற்றக்கோரி மண்டபத்துக்குள் இருந்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர். ஆடுகள் அடைக்கப்படும் மண்டபத்தில் தங்களை அடைத்து போலீஸார் அவமானப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts