சொந்த கட்சியினரின் ஆதரவு, கூட்டணி கட்சியின் ஆதரவு உள்ளிட்டவற்றை இழந்த காரணத்தால் தனது பதவியை 53 வயதான பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற நிலையில் தொடர்ந்து பல முறை அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வருகிறது. அவரது சமூக வலைதள பதிவுகளும் அதை சுட்டும் வகையில் இருந்துள்ளன.
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைவதில் கனடாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார்.
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றிணைவோம். அது பெரிய தேசமாக இருக்கும் என ட்ரம்ப் தற்போது கூறியுள்ளார்.
அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது! | Thedipaar News