நான்கு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்: இறப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது 7.1 ரிக்டராக பதிவானது. இந்நிலையில் நேபாள - திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அது 7.1 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. 

அண்டை நாடான நேபாள தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீட்டை வீட்டு வெளியேறி வீதிகளில் நின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுரவின் தூரநோக்கம்! | #CleanSriLanka | Thedipaar News

Related Posts