கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த சோதனைகள் காரணமாக பஸ் ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இன்று சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகள் பேருந்துகளை கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிவில் உடையில் அதிகாரிகளை நியமித்து, சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்தும் வகையில், வாகன சோதனையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் அணுகுமுறையை விமர்சித்த கெமுனு விஜேரத்ன, சட்ட அமுலாக்கம் என்ற போர்வையில் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டினார். (P)
அரிசி பிரச்சனைக்கான தீர்வை தேடும் அநுர அரசு! | Thedipaar News