ஹமில்டனில் வாகனத் திருட்டு: 11 மற்றும் 15 வயது சிறுவர்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹமில்டன் நகரில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 11 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நயாகரா பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் இடம்பெற்றது. குறித்த சிறுவர்கள் அந்த குடியிருப்பின் வாகனத் தரிப்பில் வலுக்கட்டாயமாக நுழைந்து, அங்கிருந்த இரண்டு வாகனங்களின் சாவிகளை திருடி, அவை மூலமாக திருட்டு நிகழ்த்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட வாகனங்கள் 2015 ஆம் ஆண்டு வெளியான வெள்ளை நிற Chevrolet Silverado மற்றும் Jeep Cherokee ஆகும். இந்த இரு வாகனங்களும் தொடர்ந்து மிகவும் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் செலுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்ததைத் தொடர்ந்து, ஹமில்டன் போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், இரு வாகனங்களும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. மேலும், சந்தேகநபர்களிடமிருந்து சிறிதளவு போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறைந்த வயதிலேயே இவ்வாறான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது சமூகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts