ரொறன்ரோ பெரும்பகுதியில் ஜூன் மாத வீட்டு விற்பனை சரிவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ பெரும்பகுதியில் கடந்த ஜூன் மாதம் வீட்டு விற்பனை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஜூன் மாதத்தில் ரொறன்ரோ பெரும்பகுதியில் 6,243 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனைக்கொட்கு ஒப்பிடுகையில் 2.4 சதவீதம் குறைவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் வீட்டு விற்பனை 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, மாதந்தோறும் சந்தையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாகவும், வருடத்தோறும் கணிப்பில் சற்று தடுமாற்றம் இருப்பதாகவும் வியாபார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக உயர்ந்த வட்டி விகிதங்கள் மற்றும் செலவுகள் அதிகரிப்பதே வீட்டு சந்தையில் இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Posts