தனது கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவைத் தொடர்வதாக விஜய்யின் மனைவி சங்கீதா, தான் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த 24ஆம் திகதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மனுவில் சங்கீதா தனது கணவரான நடிகர் விஜய் நடிகையுடன் கொண்டிருக்கும் திருமணம் மீறிய உறவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவில் சங்கீதா மேலும் தெரிவித்துள்ளதாவது,
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது.
நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால். வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன் என சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
