Font size:
Print
இந்தியா முழுவதும் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் வி*பத்தில் சிக்கியவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டால் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும். இந்த திட்டத்தின் படி விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். கடந்த வருடம் மட்டும் 1.8 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உ*யிரிழந்த நிலையில் இதில் 40 ஆயிரம் பேர் ஹெல்மெட் அணியாததால் உ*யிரிழந்துள்ளனர்.
Related Posts