பிச்சைகாரனுடன் ஓடிப்போன மனைவி! இறுதியில் இருக்கு டிவிஸ்ட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் ஹர்தோய் பகுதியில் ராஜேஸ்வரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 36 வயது ஆகும் நிலையில் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய கணவர் ராஜு தன்னுடைய ‌ மனைவி நான்கே பண்டிட் என்பவருடன் ஓடிப் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் யார் என்றால் தெருவில் பிச்சை எடுப்பவர். பிச்சை எடுக்கும் வரும்போது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிவிட்டதாகவும் தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டதாகவும் கூறியிருந்தார். இது பற்றி கேள்விப்பட்ட ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்கு சென்றார். அவர் தன்னுடைய கணவரால் தினசரி உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க தான் உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றதாகவும் மற்றபடி நான் யாருடனும் வீட்டை விட்டு ஓடிப் போகவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இது பற்றி காவல்துறையினர் கூறும் போது ராஜு கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என்று தெரிய வந்ததால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Related Posts