அப்படி போடு! பெண்ணை பற்றி பேசினாலே இனி சிறை தானா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரள உயர்நீதிமன்றத்தில் இருவர் தங்கள் மீதான பா*லியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருந்தனர். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி ஏ பத்ரூதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த ஊழியர் மீது சக பெண் ஊழியர் ஒருவர் தன்னை பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறி புகார் கொடுத்திருந்தார். அதாவது உங்களுடைய உடல் அழகாக இருக்கிறது போன்ற உடல் அமைப்பு குறித்து அவர் whatsappபில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் புகார் கொடுத்த போதிலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது பெண்ணின் உட*லமைப்பை வர்ணிப்பது பா*லியல் குற்றத்திற்கு கீழ் வராது என்றார். ஆனால் அரசு தரப்பில் பெண் வழக்கறிஞர் அவர் அனுப்பிய மெசேஜ் ஆ*பாசமாகவும் பா*லியல் ரீதியாகவும் இருந்ததாக வாதிட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி உட*ல் அமைப்புகள் குறித்து பேசுவது பா*லியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் வரும் என்று கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts