ரொறன்ரோ பட்ஜெட் 2025ன் முதல் வரைவு திங்களன்று வெளியிடப்பட்டது. மேயர் ஒலிவியா சோ மற்றும் பட்ஜெட் தலைவர் ஷெல்லி கரோல் ஆகியோர்வெளியிட்டனர்.
இதில் சொத்து வரியை 6.9 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சராசரி வீட்டு உரிமையாளருக்கு இந்த ஆண்டு $268 கூடுதலாக செலவாகும்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் $1.8 பில்லியன் அதிகரித்து மொத்தம் $18.8 பில்லியனாக உள்ளது. இது நகரச் செலவினங்களில் $654 மில்லியன் அதித்து இருப்பதை காட்டுகிறது. இதில் பெரும்பாலானவை TTC மற்றும் போக்குவரத்து சேவைகள், அவசர சேவைகள், சமூக வீடுகள் மற்றும் நகர ஊழியர்கள் செலவீனங்களுக்கு செல்கிறது.
மூலதன பட்ஜெட் $9.8 பில்லியன் அதிகரித்து $59.6 பில்லியனாக உள்ளது. TTC கடற்படை மறுசீரமைப்பு, சமூக குடியிருப்பு கட்டிட பராமரிப்பு மற்றும் பூங்கா வசதிகள் மேம்படுத்தல் போன்ற திட்டங்களுக்கு செலவிடப்பட உள்ளது.
TTC செயல்பாடுகளுக்கு $1.38 பில்லியன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட $85 மில்லியன் அதிகமாகும்.
இதை தொடர்ந்து அவசர உதவியாளர்கள், பொழுதுபோக்கு வசதிகள், கவுன்சில் மற்றும் மேயர் அலுவலகங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.