Vaughan நகரமும் தமிழ் சமூகமும் வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளத்தை சேர்த்துள்ளன. வோன் நகர மன்றத்தில் ஜனவரி 10 மதியம் 1 மணிக்கு முதல் முறையாக தமிழ் மரபுத் திங்கள் கொடி ஏற்றப்பட்டது. இந்த விழா தமிழர் பெருமையைச் சொல்லும் ஒரு நிகழ்வாகவும், நகரத்தின் இனம்தொறும் ஒற்றுமையையும் பொலிவூட்டும் நிகழ்வாகவும் அமைந்தது.
Steven Del Duca நகர முதல்வரின் முக்கிய உரை:
இந்தக் கொடியேற்ற விழாவில் வோன் நகர முதல்வர் சிறப்பு உரையாற்றி, தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்களைப் பாராட்டினார். அதாவது, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமை, பணிவு, மற்றும் சமூகத்தின் நலனுக்கான பெரும் பங்களிப்புகள் வோனின் பன்முகத்தன்மையை மேலும் பிரகாசமாக்குகின்றன என்றார்.
நகர முதல்வர் மேலும் பேசுகையில், இந்த கொடியின் உயர்வு, ஒரு நகரமாக எம் அனைவரையும் இணைக்கும் நினைவூட்டலாகவும், பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் எங்கள் உறுதிபாட்டை வெளிப்படுத்துவதாகவும் விளங்குகிறது. தமிழ்ச் சமூகத்தின் பணிவும், பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான உறுதிப்பாடும் ஏனைய சமூகங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.
வோன் நகரில் தமிழ் மரபுத் திங்கள் கொடி ஏற்றும் நிகழ்வின் போது, வோன் தமிழ் மரபு மற்றும் கலாசார அமைப்பின் தலைவர் திரு. கண்ணன் குமரசாமி உரையாற்றி, இந்த நிகழ்வின் சிறப்பைக் குறிப்பிடுகையில், “இன்று எங்கள் சமூகத்திற்கும் நகரத்திற்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், இந்த கொடி எங்கள் செழுமையான மரபை, உறுதியை, தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது என்றும், கனடாவின் பன்முகத்தன்மையைக் கொண்டு வாழ்ந்தாலும், நமது பாரம்பரியத்தை பேணுவதின் அவசியத்தை நினைவூட்டுகிறது”என்றும் கூறினார்.
தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியும், வோன் நகரின் முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளும் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்படுகின்றன. நகர முதல்வர் மற்றும் முக்கிய தனிப்பிரிவினர்கள் நிகழ்வில் பங்கேற்று, இந்த நிகழ்வின் மூலம் வோன் நகரின் பன்முகத்தன்மையை மேலோங்கச் செய்யும் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.
திரு. கண்ணன் குமரசாமி, நகர மன்றத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், இது எங்கள் சமுதாயத்தின் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். “உங்கள் ஊக்கமும் ஆதரவும் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் அனைவரும் சேர்ந்து எங்கள் வருங்கால சந்ததிகளுக்கான அடியினை உருவாக்கிக் கொடுக்கிறோம்,” என்றும் குறிப்பிட்டார்.
வோன் நகரில் நடைபெற்ற இந்த முதல் முறையான கொடி ஏற்றும் நிகழ்வு, தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பையும் வோன் நகரின் பன்முகத்தன்மையை கொண்டாடும் உறுதியையும் வெளிப்படுத்தும். கல்வி முதல் பொருளாதார முன்னேற்றம் வரை, கனடியத் தமிழர்கள் கனடாவின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
தமிழ் மரபுத் திங்கள் கொடி உயர்ந்து பறந்தபோது, அது வோன் நகரின் பன்முகத்தன்மை மற்றும் அந்நகர மக்களின் ஒருமைப்பாட்டின் நினைவுச் சின்னமாகவும் இருக்கின்றது. இனி வரும் நாட்களிலும் மேலும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும், அனைவரின் கலாச்சார பங்களிப்புகளையும் கொண்டாடும் நகரமாகவும் இருக்கும்.
சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக 7 நாட்களும் பணியாற்றுவர்! | Thedipaar News