உக்ரைன் - ரஷ்யா யுத்தக் களத்தில் இந்தியர் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

உ க்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்பு ராணுவத்துக்காக யுத்தக் களத்தில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பினில் என்ற நபர் உயிரிழந்துள்ளார். அவர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் பினில். 32 வயதான அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரோடு மற்றொரு இந்தியரான ஜெயின் என்பவரும் காயமடைந்துள்ளார். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பினில் உயிரிழந்த தகவலை அவரது மனைவி ஜாய்சிக்கு மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு வாய்மொழியாக தெரிவித்துள்ளது.

பல்வேறு முறை யுத்தக் களத்தில் இருந்து இந்தியா திரும்ப அவர் முயற்சித்துள்ளார். அதற்காக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக முயன்று தோல்வி கண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவ தரப்பு விடுவிக்கும் வரை அவர் பணியில் இருக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. யுத்தத்தில் முன்களத்தில் பணியில் இருப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்ந்து போயுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலதுசாரிக் கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை! | SJB | Thedipaar News

Related Posts