உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26 வரை நடைபெறும் பிப்ரவரி 26-ம் தேதி வரை ஒன்றரை மாத காலம் இந்த விழா நடைபெற உள்ளது. கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிவதால், 4,000 ஹெக்டேர் பரப்பளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1.60 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில போலீஸார், தீயணைப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கங்கை நதியில் நீந்தியபடி செல்லும் நீரடி ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு உடல்நல அசவுகரியங்கள் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்க கோபிகஞ்ச், உஞ்ச் உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன
யாழ் வல்வெட்டித்துறையில் மாபெரும் பட்டத்திருவிழா! | Thedipaar News